மிரட்டலான ஆர்யாவின் "சார்பட்டா" ஃபர்ஸ்ட் லுக் !!

V4U MEDIA [ Wed, Dec 02, 2020 ]

125

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா, அட்டகத்தி தினேஷ் நடித்த அட்டகத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ் என சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இயக்குனராக மட்டுமின்றி தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் சில தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என இரண்டு படங்களை தயாரித்துள்ளார். தற்போது கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்' திரைப்படத்தை தயாரித்து வருகிறார். 


Image

பா.ரஞ்சித் இயங்கிவரும் படத்திற்காக நடிகர் ஆர்யா மிக கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.இந்நிலையில், ஆர்யா மற்றும் இயக்குனர் ரஞ்சித்.பா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று "சார்பட்டா" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வைரலாகி வருகிறது.

Tags : Cinema

Latest News