வலிமை படத்தில் இணையும் தளபதி விஜய் படத்தின் கதாநாயகி?

V4U MEDIA [ Fri, Dec 13, 2019 ]

25

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'வலிமை' படம் 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு தல அஜித் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கவுள்ள இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இதில் தல அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற தேர்வு முடிவடைந்துவிட்டாலும், படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இப்படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.

இதில் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ள சண்டைக்காட்சிகளை ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 
"’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ம் தேதி இன்று முதல் தொடங்கவுள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும். அஜித் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.கௌரவம் படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை யாமி கௌதம் கதாநாயகியாக வலிமை படத்தில் நடிக்கக்கூடும் என்று செய்திகள் வந்தாலும், சமீபத்திய ஊகங்கள் என்னவென்றால், நண்பன் படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடித்த இலியானா டி க்ரூஸ் இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது மற்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.Latest News