தளபதி விஜய்யின் பிகில் டிரெய்லர் புதிய சாதனை!

V4U MEDIA [ Mon, Oct 14, 2019 ]

1

தளபதி விஜய்யின் பிகில் டிரெய்லர் யூடியூப்பில் புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. தற்போது, பிகில் இந்தியாவில் இதுவரை வெளியான அனைத்து படங்களிலும் விரும்பப்பட்ட வீடியோ வரிசையில் இரண்டாவது டிரெய்லராக உள்ளது, தென்னிந்திய படங்களுக்கிடையில் பிகில் படத்தின் டிரெய்லர் # 1 இடத்தில் உள்ளது. 1.7 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளுடன், 'பிகில்' டிரெய்லரின் பொது பார்வை எண்ணிக்கை 21 மில்லியனுக்கும் அதிகமாகும்.

ஷாருக் கான், கரண் ஜோஹர், வருண் தவான் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த ட்ரெய்லரைப் பற்றி ஆர்வமாக ட்விட்டரில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்து உள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படத்தை, ஒட்டுமொத்த படக்குழுவும் இந்த வாரம் தணிக்கை முறைகளை முடிக்க கடுமையாக உழைத்து வருகிறது.