தளபதி 65’ பட பூஜை புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல்

V4U MEDIA [ Thu, Apr 01, 2021 ]

127

நடிகர் தளபதி விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது.



இந்நிலையில், தளபதி 65 படம் இன்று பூஜையுடன் நேற்று தொடங்கி உள்ளது. இதில் தளபதி விஜய், இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை பூஜா ஹெக்டே, “வேறு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதால், தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.




Tags : Cinema