புதிய கெட்-அப்புக்கு மாறிய தல அஜித்குமார்!!

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

10 10 10 10 10

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்திற்காக தல அஜித் இப்போது புதிய தோற்றத்தில் மாறி உள்ளார்.நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தல அஜித்குமார், தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் இப்போது தயாராகிறது. இப் படத்துக்கு ‘வலிமை’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் இருக்கும் தயாரிப்பாளர் போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ திரைப்படம் பூஜை எளிமையான விதத்தில் நடந்தது.

அதிரடி சண்டை திரைப்படமாக உருவாகும் இப்படத்தில், தல அஜித்குமார் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் இளமை தோற்றத்தில் இருந்த தல அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இப்போது வேற கெட்-அப்பில் தல அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


இதில் தல அஜித் வேதாளம் திரைப்படம் பாணியில் கொஞ்சம் மொட்டையடித்து கொஞ்சம் முடி வைத்து, மீசை வித்தியாசமாகவும் வைத்துள்ளார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் வலிமை திரைப்படத்தில் தல அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest News