ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் ஆர்யாவின் 'டெடி' !

V4U MEDIA [ Tue, Jul 07, 2020 ]

54

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள 'டெடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் விறுப்பான "டீசர்" வீடியோ சில மாதங்களுக்கு முன் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.Image

"டெடி" படம் ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளி போனது. இந்த நிலையில் டெடி படத்தை ஓடிடியில் நேரடியாக ரிலிஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Image

டெடி படத்தில் சதீஷ், மசூம் ஷங்கர், இயக்குநர் மகிழ் திருமேனி, சாக்‌ஷி அகர்வால் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டெடி படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

Tags : Cinema

Latest News