தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு!

V4U MEDIA [ Tue, Jun 30, 2020 ]

4

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்களிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர்], மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது சில பரிந்துரைகளை மருத்துவக் குழு முதலமைச்சரிடம் தெரிவித்தது.

இந் நிலையில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே என்ன கட்டுப்பாடுகள் உள்ளனவோ அதே கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்விநிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி கிடையாது.மாநிலங்களுக்கு இடையேயோன பேருந்து போக்குவரத்து அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளது .


Latest News