இன்று இரவு 7 மணிக்கு தமிழக மக்களை சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]

கோரோனா வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. பாரத பிரதமர் மோடி அவர்கள் நேற்று (மார்ச் 24) இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்கள் முன் தோன்றினார். அப்போது அவர் கூறியது "ஊரடங்கு உத்தரவை மக்கள் இன்று இரவில் இருந்து 21 நாட்களுக்கு பின்பற்ற வேண்டும்" என்றார்.

காட்டு தீ போல பரவும் நோயினால் வீட்டிற்குள் உறவினர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். கோரோனா வைரஸ் சிகச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகளுக்காக 15000 கோடி ஓதிக்கிடு செய்துள்ளார்.

இன்று தமிழகத்தில் புதிதாக மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்கள் முன் இன்று (மார்ச் 25) இரவு 7 மணிக்கு தோன்றுகிறார். அவர் என்ன கூற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest News