சூர்யா -40 சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு !!

V4U MEDIA [ Sun, Oct 25, 2020 ]

126

சூர்யா 40 சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு !!

சூர்யா நடிப்பில் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளிவரவிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில், சில காரணங்களால் இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையே சூர்யாவின் அடுத்தப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யாவின் 40வது திரைப்படமான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்க இருக்கிறார். இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படம் கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

We are happy to announce @Suriya_offl's #Suriya40bySunPictures directed by @pandiraj_dir.#Suriya40 pic.twitter.com/dCOSDq98s0

Tags : Suriya

Latest News