அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க - சூர்யா

V4U MEDIA [ Sat, Nov 30, 2019 ]



கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து
ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம்
நடித்திருக்கும் படம்  இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.

சூர்யா பேசியது...

ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைஞ்சிருக்க படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய
படமா மாறியிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு. கார்த்தி ஜோ இரண்டு பேருமே சிறந்த  நடிகர்கள்.
கிளிசரின் போடமா என்னால அழவே முடியாது “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது . ஆனா கார்த்தி கிளிசரின் போடாம அத அநாயசமா
பண்ணிடுறாரு. கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப ஈஸியா பண்ணிடுறார்.

ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையா பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் செஞ்சிருக்கறது சந்தோஷம்.

கோவிந்த் வசந்தா நான் சந்திச்சப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. படமும் அழகா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இறுதியாக
ரசிகர்களுக்கு உறவுகளுக்கு நாம் கார்த்தி எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க, 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால்
சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விசயங்கள் நடந்துடுது. தயவு செய்து அத
தவிர்த்துடுங்க. எல்லோருக்கும் நன்றி


Latest News