சொன்னதை செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

V4U MEDIA [ Wed, Oct 09, 2019 ]

சொன்னதை செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !வில்லனாக நடிதித்துக்கொண்டிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக ஆனார்.அப்படத்தை தயாரிப்பாளர் கலைஞானம் தயாரித்தார். இந்த ஆண்டு, அந்தப் படத்தினைத் தயாரித்த கலைஞானம் அவர்களின் 75 ஆண்டு கால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும் , அவரது 90 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது, மேடையில் பேசிய நடிகர் சிவக்குமார், கலைஞானத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்று கவலைத் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சி பாரதிராஜா தலைமையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர், பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.அவர்களிடம் பேசிய சிவக்குமார், தமிழக அரசிடம் அவருக்கு வீடு ஒன்றினை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்பொழுது, மேடையில் பேசிய சூப்பர் ஸ்டார், கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தரும் வாய்ப்பினை தமிழக அரசுக்குத் தர மாட்டேன். நானே என் சொந்த செலவில் ஒரு வீடு வாங்கித் தருவேன், பாக்யராஜ் சார், ஒரு வீடு பாருங்கள் என்று கூறினார்.


   


  அதுபோலவே, தற்பொழுது சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள, வெங்கடேசன் நகரில், அவருக்கு வீடு ஒன்றினை வாங்கித் தந்துள்ளார்.நேற்று காலை, அவருடைய வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த், குத்துவிளக்கேற்றி வீட்டினை பார்வையிட்டார் .


Latest News