சன் டிவியில் நேரடியாக வெளியாகும் சுந்தர்.சி இன் "நாங்க ரொம்ப பிஸி" !

V4U MEDIA [ Mon, Oct 26, 2020 ]

120

கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'மாயாபஜார் 2016' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி மற்றும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஓடிடி-இல் அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் பிரசன்னா, ஷாம் மற்றும் அசோக் செல்வன் ஆகிய மூன்று ஹீரோக்களும் சுருதிகா என்ற புதுமுக ஹீரோயினும் நடிக்கவுள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்.


சத்யா இசையமைக்கவுள்ள இந்த படத்தை சுந்தர் சியின் இணை இயக்குனர்களில் ஒருவரான பத்ரி இயக்கி வருகிறார். கமெற்சியால் அமசங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றப்பட்டு உள்ளது.

இப்படத்தை வரும் தீபாவளியன்று சன் டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Cinema

Latest News