இந்திய விமானப்படைக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா !

V4U MEDIA [ Sat, Oct 24, 2020 ]

94

சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி (OTT) தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்படவிருந்த நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத், வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்திய விமானப் படை தரப்பிலிருந்து ஒப்புதல் கிடைப்பதற்காக படக்குழு காத்திருந்தது . தற்போது அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது . விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது .

அதனால் முறையாக இந்திய விமானப்படை படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு தடையில்லா சான்றிதழ் அளித்தால் படத்தை வெளியிட முடியும். தற்போது விமானப்படை மற்றும் திரைப்பட வசதி அலுவகம் ஆகியோரிடமிருந்து படம் அனுமதி கிடைத்துள்ளது.

தற்போது சூர்யா இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் “எனது நலன் விரும்பிகள், நண்பர்கள், டெல்லி திரைப்பட வசதி அலுவலகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Tags : Suriya

Latest News