சோனு சூட்டிற்கு வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய் ஹீரோயின்!

V4U MEDIA [ Thu, Oct 01, 2020 ]

96

தனது அயராத உழைப்பால் இன்று இந்தியாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் நடிகர் சோனு சூட். அருந்ததி, நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு, ஆத்தாடு, தப்பாங், ஒஸ்தி, ஆகாடு, தேவி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸால் நிலவும் ஊரடங்கில் உணவு மற்றும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல தனது சொந்த செலவில் பஸ் வசதி செய்து கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட மூன்று ஆதரவற்ற குழந்தைகளை என் பொறுப்பில் வளர்வார்கள் என கூறினார். 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் முன் வந்து பல உதவிகளை செய்து வந்தார். இது மட்டுமின்றி டுவிட்டர் மூலமாக உதவி கேட்கும் பலருக்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் உதவி செய்து வருகிறார். மகள்களை வைத்து ஏர் பூட்டிய விவசாயிக்கு டிராக்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பறி போய் விட்டதால் காய்கறி விற்பனை செய்த இளம்பெண்ணுக்கு சாப்ட்வேர் பணி என கணக்கில் இடமுடியாத அளவிற்கு அதிகமாக உதவி செய்துள்ளார்.

.


இவர் செய்த இந்த மனிதநேயமிக்க செயலை சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். படத்தில் வில்லனாக நடித்தாலும் ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சோனு சூட்டிற்கு சிறப்பு விருதினை வழங்குவதற்கான அறிவிப்பை ஐ. நா அவை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இரவு பகல் என்று பாராமல் உழைத்த அவருக்கு பாரட்டும் விதமாக சஸ்டைபள் டெவலெப்மெண்ட் கோல்ஸ் என்ற விருதினை ஐ.நா வழங்கவுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சோனு சூட் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என கூறியுள்ளார்


மேலும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

Tags : Cinema

Latest News