ஜப்பான் நாட்டின் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட "சில்லுக்கருப்பட்டி" !

V4U MEDIA [ Sun, Oct 25, 2020 ]

166

2019ம் ஆண்டு ஆண்டு தமிழில் வெளியான சில்லுக் கருப்பட்டி திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Image

சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் நடித்து இருக்க இந்த படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. கவித்துவமான, நான்கு துண்டு கதைகளை ஒன்றாக்கினால் அதுதான், சில்லுக் கருப்பட்டி.

இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் மண்ணின் ஒசாகா நகரில் மிக விமர்சியாகவும் பிரமாண்டமாகவும் நிகழ உள்ள ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா வருடத்தின் குளிர் கால தொடக்கத்தில் நிகழும். இதனை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனம், பிக் பிரிண்ட் பிக்ஸர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.

Tags : Cinema

Latest News