சிம்புவின் "மாநாடு" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

V4U MEDIA [ Thu, Jan 14, 2021 ]

142

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு,

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு என பிஸியாக உள்ளது மாநாடு படக்குழுவினர்..

Image

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.அரசியல் களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் வரவேற்பு பெறாத நிலையில், அவர் தற்போது கமிட்டாகியுள்ள படங்களால் அவர் மீண்டும் பிஸியாகிவிட்டார். ஆன்மீகத்திலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் மோசன் போஸ்டரை சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

மிகவும் வித்தியாசமாகவும் அதேசமயம் அரசியல் கட்சிக்கொடிகளில் சிலம்பரசன், வெங்கட் பிரபு பெயர்கள் வருவதுபோலவும் சிம்பு அப்துல் காலிக் கதாப்பாத்திரத்தில் கையில் பையுடன் தோன்றுவதாக மாஸாக மோசன் போஸ்டர் உள்ளது. இசையில் யுவன் தனி ஸ்கோர் செய்து தீம் மியூசிக்கை தெறிக்கவிட்டுள்ளார்.

 தற்போது மாநாடு பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.
வீடியோ லிங்க் கீழே உள்ளது.





Tags : Cinema

Latest News