புதிய திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சித்தார்த்!!

V4U MEDIA [ Tue, Jan 14, 2020 ]

2

எப்போதுமே தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருப்பவர் சித்தார்த். தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிப்பு வரும் வரை, தனது ட்விட்டர் பக்கத்திலோ அல்லது பேட்டிகளிலோ எதையுமே கூறமாட்டார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'அருவம்' படத்துக்கு முன்பே, ’கப்பல்’ இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் நடித்து வந்தார். அதனை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

'டக்கர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவரவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை விஷால் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிய காதல் படமாக 'டக்கர்' உருவாகியுள்ளது. இதில் 'மஜிலி' படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் நாயகியாக நடித்துள்ளார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் தவிர்த்து கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 'சைத்தான் கா பச்சா' படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதனை சித்தார்த் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்குப் பிறகு, டக்கர் படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோவுக்காக சித்தார்த் மற்றொரு படத்தில் நடிக்கிறார், இந்த படத்தை அறிமுக இயக்குனர் அமிர்தராஜ் இயக்குகிறார். பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் இந்த புதிய திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் சித்தார்த் தனது சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.