தெலுங்கு திரையுலகில் மீண்டும் கால் பதிக்கும் நடிகர் சித்தார்த் !

V4U MEDIA [ Sat, Sep 19, 2020 ]

106

2002ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் "கன்னத்தில் முத்தமிட்டால்". இத்திரைப்படத்தில் பேருந்து பயணியாக சித்தார்த் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த"பாய்ஸ்" திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

நடிகர் சித்தார்த் அவர்கள் தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமின்றி, சில படங்களையும் தயாரித்துள்ளார்.


தமிழில் காதலில் சொதப்புவது எப்படி (2012), ஜில் ஜங் ஜக் (2016), அவள்(2017) ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். இதில் 2017ம் ஆண்டு "அவள்" மாபெரும் வெற்றி பெற்று வசூல் வாரி குவித்தது. மேலும் இவர் பின்னணிப் பாடகராகப் பல திரைப்படப் பாடல்களைப் பாடி இருக்கிறார்.

"தி லயன் கிங்" திரைப்படத்தின் தமிழ் மொழி டப்பிங்கில் இவர் சம்பாவுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். சைத்தான் கா பச்சா, டக்கர், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் தற்போது இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஏ.கே.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் இவர் நடிக்க உள்ளார். இந்த படத்தில் "எங்கேயும் எப்போதும்" படத்தின் நாயகன் ஷரவாமந்தும் சித்தார்த்தும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப் படுகிறது. இந்த படத்தை இயக்குநர் அஜய் பூபதி அவர்கள் எழுதி இயக்குகிறார்.

Tags : Cinema

Latest News