இணையதளத்தில் வைரலாகும் ஷ்ரத்தா கபூர் வெளியிட்ட புகைப்படம்!

V4U MEDIA [ Sat, Nov 16, 2019 ]

2

ஷ்ரத்தா கபூர் தனது குழந்தை பருவ ஆல்பத்திலிருந்து ஒரு அரிய கிளிக்கைப் பகிர்ந்துகொண்டு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார். அந்த புகைப்படத்தில் குழந்தை ஷ்ரத்தா தனது சகோதரர் மற்றும் நடிகர் சித்தாந்த் கபூருடன் இருக்கிறார் மற்றும் அந்த புகைப்படத்தில் அவர்கள் இருவரும் மிகவும் அழகாக இருக்கின்றன. இந்த சிறுவயது புகைப்படத்தில் ஷ்ரத்தா, சித்தார்த் குழந்தைகள் அக்கா தம்பி உறவின் இலக்குகளை வெளிப்படுத்தினர். பச்சை மற்றும் சிவப்பு நிற உடையணிந்த ஷ்ரத்தா பொம்மைப் போன்று அழகாக உள்ளார் , அதே நேரத்தில் அவரது சகோதரர் சித்தாந்த் கேமராவை ஆர்வத்துடன் பார்க்கிறார்.ஷ்ரத்தா தற்போது டைகர் ஷிராஃப் உடன் ‘பாகி 3’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஷ்ரத்தா சமீபத்தில் செர்பியாவில் படமாக்கப்பட்ட சில ஆக்க்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். நடிகை ஷ்ரத்தா செர்பியாவிலிருந்து தனது படப்பிடிப்பின் பல காட்சிகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார். 'பாகி 3' திரைப்படத்தில் ‘பாகி’ படத்திற்குப் பிறகு ஷ்ரத்தா மற்றும் டைகர் மீண்டும் இணைந்துள்ளனர், மேலும் ரித்தீஷ் தேஷ்முக், அங்கிதா லோகண்டே மற்றும் அசுதோஷ் ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அகமது கான் இயக்கியுள்ள ‘பாகி 3’ 2020 மார்ச் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


ஷ்ரத்தா கடைசியாக ‘சாஹோ’ படத்தில் நடித்தார், அப்படத்தில் அவர் பிரபாஸை காதலித்தார். தனது விருப்பமான படங்களைப் பற்றி பேசிய ஷ்ரத்தா, “ஒரு நடிகராக நான் எப்போதும் வித்தியாசமான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன், புதிய சவாலை எதிர்பார்க்கிறேன். எனது எல்லா படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் எல்லாம் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் அது என்னை பரிசோதனையிலிருந்து தடுக்கவில்லை. ”