இணையத்ததில் வைரலாகும் ஷாரூக்கான் மகள் சுஹானாவின் புகைப்படம்!!

V4U MEDIA [ Sat, Nov 16, 2019 ]

1

ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இதுவரை பாலிவுட்டில் அறிமுகமாகவில்லை. இருந்தாலும், இளம் சஹானா தனக்கென்று சொந்த ரசிகர்களைக் கொண்டிருக்கிறார், ரசிகர்கள் அவரது எல்லா நிகழ்வுகள் மற்றும் சாதனைகளைப் பின்பற்றி வருகின்றனர். சம்பீத்தில் இணையதளத்தில் அவரது ரசிகர் பக்கங்களில் ஒன்று பதிவேற்றிய படம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், சுஹானா கான் நடனம் ஆடுகிறார். அது ஒரு புகைப்படம் மட்டுமே என்றாலும், அதில் அவர் நடனமாடும்போது சுஹானாவின் முகத்தில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அழகாக தெரிகிறது. ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்து உற்சாகமடைந்தனர், மேலும் ரசிகர்கள் அந்த படத்தில் அவரின் முக்கத்தில் தெரியும் அவரது நம்பிக்கையை அவரது தந்தையின் நம்பிக்கையுடன் ஒப்பிட்டனர்.


சுருஹானா நடிப்பில் தனது ஆர்வத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பது குறித்து ஷாருக்கான் பேசியுள்ளார். சினிமாவில் நடிப்பதற்காக , அதன் உயர் கல்விக்காக NYU இன் டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் நாடகம் மற்றும் நடிப்பைத் தொடங்கினார். அவர் சமீபத்தில் தனது தந்தையின் ஜீரோ படத்திற்கு உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். டெக்கான் குரோனிக்கலுடன் பேசிய ஷாருக் கான், ஜீரோவின் செட்களைப் பார்வையிடுமாறு அவர் கூறியதை வெளிப்படுத்தினார். அனுஷ்கா ஷர்மா மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் நல்ல நடிகையாக இருப்பதற்கான செயல்முறையை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் சுஹானாவுக்கு இது உதவியது.


சுஹானாவின் படிப்பு முடிந்ததும் அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்குவாரா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர், "சுஹானா எந்தவொரு திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் சேர விரும்பினால், அவர் குறைந்தபட்சம் நான்கு வருடங்களாவது அதற்கான படிப்பை முடித்து, சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். திரைப்படத் தயாரிப்பில் சேரும் எவரும் சினிமாவை நன்கு கற்றுக்கொண்டு, தங்களைத் தாங்களே தயார்படுத்திக்க வேண்டும். கலை மற்றும் அது செயல்படும் முறையை கற்றுக்கொண்ட பின், அவள் நடிப்பைப் பற்றி யோசிக்க முடியும். அவள் சினிமா நடிப்பு படிப்பை முடித்த பின்னரே அவள் நடிக்க விரும்பினால் அதைப் பற்றி யோசிப்பேன். " என்றும் அவர் கூறியுள்ளார்,