முந்தானை முடிச்சு ரீமேக்கில் இணையும் சசிகுமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் !

V4U MEDIA [ Sat, Sep 19, 2020 ]

101

திரைக்கதை மன்னன் பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு. ஏ.வி.எம் தயாரித்த இப்படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1983ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் விரும்பினார் என்று பாக்யராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் 37 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தை இப்போது ரீமேக் செய்யவுள்ளனர். முதல் பாகத்தை எழுதி இயக்கிய பாக்யராஜே இந்த பாகத்துக்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.
Image
இந்நிலையில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க ஊர்வசி கேரக்டரில் தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

Tags : Cinema

Latest News