'ஏ1' இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் சந்தானம் !

V4U MEDIA [ Tue, Dec 01, 2020 ]

123

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ’ஏ1’ (A1) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. இதனை அடுத்து இயக்குனர் ஜான்சனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தானம் மற்றும் ஜான்சன் மீண்டும் இணையும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளி வந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சந்தானம் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே சந்தானம் நடித்த டிக்கிலோனா என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது மற்றும் சமீபத்தில் தீபாவளி அன்று வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.Image


Tags : Cinema

Latest News