’சடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது !

V4U MEDIA [ Thu, Aug 13, 2020 ]

111

’சடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது !

மகேஷ் பட்டின் எழுத்து, இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’சடக்-2’. இந்தத் திரைப்படம் 1991ஆம் ஆண்டு சஞ்சய் தத் மற்றும் பூஜா பட் நடிப்பில் வெளிவந்த ’சடக்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்த ’சடக்’ திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து சடக்-2 வெளியாகிறது.

Sadak 2' trailer: Sanjay Dutt, Alia Bhatt, Aditya Roy Kapur embark ...
ஆலியா பட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், சஞ்சய் தத், பூஜா பட், ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் க்ரொவர், மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை மகேஷ் பட் & முகேஷ் பட்டின் விஷ்வேஸ் பிலிம்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூயோஸ் இணைந்து  தயாரித்திருக்கிறது.

தற்போது இந்த இடத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது . வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் படம் ரீலீஸ் ஆகிறது .


Tags : Cinema

Latest News