மீண்டும் இணையும் விஜய் தேவர்கொண்டா, சந்தீப் ரெட்டி கூட்டணி.

V4U MEDIA [ Mon, Oct 14, 2019 ]

3

வெற்றிக்கூட்டணியான விஜய் தேவர்கொண்டா மற்றும் சந்தீப் ரெட்டி வாங்கா ஆகியோர் கத்தாரில் நடந்த சைமா 2019 ரெட் கார்பெட் நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரபல தொகுப்பாளரான மஞ்சுஷாவின் வெளிப்படையான கேள்வி, அவர்கள் எப்போது தங்கள் கூட்டணியில் மீண்டும் பணியாற்றுவார்கள் என்பதுதான். அதற்கு நேரடி பதில் அளிப்பதற்கு சந்தீப் ரெட்டி வாங்காவிடம் விஜய் அந்த கேள்வியை அனுப்பினார். அந்த டபுள் பிளாக்பஸ்டர் இயக்குனர் ஏற்கனவே தனது இரண்டாவது இந்தி திரைப்படமான டி சீரிஸ், சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்திரகாளி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு குற்ற நாடக பின்னணி படத்தில் பணியாற்றி வருகிறார். 

எனவே, தனது இரண்டாவது இந்தி திரைப்படத்திற்குப் பிறகு, அவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து பணியாற்றுவார் என்று உடனடியாக கூறினார். இது ஒரு ஸ்பாய்லர் என்று நீங்கள் நினைத்தாலும் இல்லாவிட்டாலும், இந்த கூட்டணியானது பலவிதமான சலசலப்பைக் கொண்டிருக்கும், மேலும் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். 'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவர்கொண்டாவுக்கு பெரிய ஹிட், இப்போது அவர் பெரிய உச்சநட்சத்திரமாக உள்ளார், மேலும் விஜய் தனது பிளாக்பஸ்டர் இயக்குனருடன் அணிசேரும்போது தன்னை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக அது இருக்கலாம்.