குழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா!!

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

10 10 10 10 10

தன்னுடைய குழந்தை பிறக்கும் தேதி மற்றும் நேரம், வருடம் ஆகியவற்றை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் கூறியுள்ளார்.​


தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை சமந்தா. சமந்தா தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சமந்தா, அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு ரசிகர்களுடன் உரையாடும் போது சமந்தாவிடம் பெரும்பாலானோர் கேட்கிற கேள்வி உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்ற கேள்வி தான். 


இந்த கேள்விக்கு அடிக்கடி பதில் சொல்லி சலித்துப்போன நடிகை சமந்தா, ’வரும் 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று காலை 7 மணிக்கு எனக்கு ஒரு அழகான குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலாக கூறியுள்ளார். நடிகை சமந்தா தன்னுடைய செல்ல நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவுடன் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Latest News