சமூக வலைத்தளங்களில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு !

V4U MEDIA [ Thu, Oct 22, 2020 ]

192

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிம்பு. இவரது நடிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரை சுற்றி பல பிரச்சனைகள், சர்ச்சைகள் சுற்றி சுற்றி வந்தாலும் இவரை ரசிகர்கள் எப்போதும் எங்கும் விட்டு கொடுத்தது இல்லை.

நடிகர் சிம்பு கடந்த 2015ம் ஆண்டு சில பிரச்சனைகளால் டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும் அந்த டுவிட்டர் பக்கம் தனது ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர்கள் அந்த பக்கத்தை வழி நடத்துவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மீண்டும் தேவைப்பட்டால் சமூக வலைத்தளத்திற்கு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்இந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (அக்டோபர் 22) என்ட்ரி ஆகியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிம்பு தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால் அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள், டீசர், டிரைலர் வெளியீடு என அனைத்தும் அவரது சமூக வலைத்தள பக்கத்திலிருந்து தான் வெளியாகும் என தெரிகிறது.
Image


மீண்டும் டுவிட்டர் , இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சிம்பு திரும்பி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #SilambarasanTR #SilambarasanTR46 #Atman என்று இந்தியா அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.

Tags : Cinema

Latest News