தளபதி விஜய் பாடலை பாராட்டிய நடிகர் சிம்பு

V4U MEDIA [ Mon, Feb 17, 2020 ]

விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'ஒரு குட்டி கதை' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் தளபதி விஜய் பாடிய பாடலை நடிகர் சிம்பு பாராட்டியுள்ளார். அவர் இது குறித்து கூறிய போது குழந்தைகளையும் ரசிகர்களையும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் கவர்ந்து உள்ளதாகவும் விஜய்யின் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் இந்த பாராட்டுக்கு பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது 'ஒருகுட்டிக்கதை' பாராட்டிய சிம்புவுக்கு நன்றி. அன்பு, பாசிட்டிவிட்டியை கூறும் குட்டிக்கதையை அதனை கடைபிடித்து வரும் சிம்பு பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

Latest News