கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவிற்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் நிதியுதவி செய்த டாடா குழுமம்!!

V4U MEDIA [ Sun, Mar 29, 2020 ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல கோடி ரூபாய் தேவைப்படுவதால் மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் தங்களால் முயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.

இதனிடையே கொரோனா பாதிப்புக்கு உதவ 500 கோடி ரூபாய் அளிப்பதாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில், “இக்கட்டான சூழ்நிலைகளில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழும நிறுவனங்கள் அதற்காக உதவி உள்ளன. தற்போது முன் எப்போதும் இல்லாததை விட இந்த தருணத்தில் களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகமாக உள்ளது“ என்றுள்ளார்.

தற்போது ஏற்கனவே அறிவித்த 500 கோடியை விட கூடுதலாக 1000 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது. “கொரோனா வைரஸால் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது, இந்த தருணத்தில் எங்களில் சிறந்த நடவடிக்கை தேவைப்படுகிறது“ என்றும் தெரிவித்துள்ளது.