சீக்ரெட்டாக வைத்திருந்த டைட்டிலை போட்டுடைத்த ராஷ்மிகா!!

V4U MEDIA [ Sat, Aug 17, 2019 ]

சீக்ரெட்டாக வைத்திருந்த டைட்டிலை போட்டுடைத்த ராஷ்மிகா!!

கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்து, 'கீதா கோவிந்தம்' படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா. அண்மையில் இவர் நடித்திருந்த 'டியர் காம்ரேட்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இவர் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகும் படம் நடிகர் கார்த்தியின் 'கார்த்தி 19'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப் பட டைட்டில் இன்னும் வெளி வராத நிலையில், ராஷ்மிக இந்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்ஸ்டா ஸ்டோரி மூலம் இந்த டைட்டிலை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா போட்டுள்ள பதிவில் படத்தில் டைட்டில் 'சுல்தான்' என குறிப்பிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை தான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார். படக்குழு அறிவிக்கும் முன்பே நடிகை வெளியிட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் #AA20 படத்திலும் இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Latest News