நடிகர் ராணாவுடன் காதலா? - நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம்.

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங், பாகுபலி படத்தின் நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கமளித்துள்ளார் 

ரகுல் ப்ரீத் சிங்க் கூறியுள்ளதாவது: “ நடிகர் ராணா வீடும் என் வீடும் மிக அருகில் தான் உள்ளது. சினிமாவுக்கு நான் வந்ததில் இருந்தே நடிகர் ராணாவை தெரியும். நானும் ராணாவும் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் தற்போது சிங்கிள் தான். நான் இதுவரை யாரையும் காதலித்ததில்லை. எனக்கு அதற்கு நேரமும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.

ரகுல் பிரீத் சிங் தமிழில் இதுவரை யுவன், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன், தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் படமான எஸ்.கே. 14, ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் தற்போது நடிக்கிறார்.


Latest News