பாகுபலி படத்தினை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டாக தயாராக இருக்கும் படத்தின் அப்டேட்!!

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]

'ஆர்.ஆர்.ஆர்' என்று குறிப்பிடப்பட்ட 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த மகத்தான திரைப்படம் 'ரதம் ரணம் ரௌத்திரம் ' அதன் அர்த்தம் 'ரைஸ் ரோர் ரிவோல்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள பரபரப்பான மோஷன் போஸ்டரில் இரண்டு ஹீரோக்கள் ஒருவரையொருவர் நோக்கி ஓடி வருகின்றனர், அதில் ஒருவர் தீப்பிழம்புகளிலும், மற்றொறு நபர் நீரின் பிரகாசத்தில் இருக்கிறார், இவர்கள் இருவரும் மோதுகையில் படத்தின் தலைப்பு விண்டேஜ் ராஜமமௌலி பாணியில் வெளியானது.

'ரதம் ரணம் ரௌத்திரம்' தமிழில் மதன் கார்க்கியின் வசனங்களை மரகதமணியின் இசையை கொண்டுள்ளது மற்றும் டி.வி.வி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. 1920 இந்தியாவின் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட இப்படத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அலிசன் டூடி மற்றும் ரே ஸ்டீவன்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.


Latest News