கன்னடத்தில் ரீமேக்காகும் நயன்தாராவின் சூப்பர்ஹிட் திரைப்படம்

V4U MEDIA [ Sat, Aug 08, 2020 ]

144


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா என்பது அனைவரும் அறிந்ததே. நடிகை நயன்தாரா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் "கோலமாவு கோகிலா" . இப்படத்தை நெல்சன் இயக்கினார். இப்படத்தினை மாபெரும் வெற்றி க்கு பின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து "டாக்டர்" படத்தினை இயக்குகிறார்.

"தளபதி" விஜய் யின் கத்தி திரைப்படத்திற்கு பின் லைக்கா கம்பெனிக்கு அதிக லாபம் & வசூல் ஈட்டிய படம் என்ற பெருமை "கோலமாவு கோகிலா" திரைப்படத்தையே சேரும்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, விஜய் டிவி ஜாக்லின், மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்திருந்தனர்.

கோலமாவு கோகிலா படத்தினை தற்போது கன்னட ரீமேக்கில் செய்யவுள்ளனர். இப்படத்தில் நடிகை ரச்சிதா ராம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 'கன்னட் கோத்திலா’ படப்புகழ் மயூரா ராகவேந்திரா இப்படத்தினை இயக்கவுள்ளாராம். இந்த கன்னட ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Tags : Cinema

Latest News