பொங்கல் விடுமுறையை குறிவைத்த பிரபுதேவா!

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

10 10 10 10 10

இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.
நடிகர் பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’. தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் பிரபுதேவா காவல் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதே பெத்துராஜ் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகிய பலரும் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து இப்போது பின்னணி வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தை பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

பொங்கல் தினத்தன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த நடிப்பில் உருவான ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News