எளிமையாக நடைபெற்ற நடிகை மியா ஜார்ஜ் நிச்சயதார்த்தம் !

V4U MEDIA [ Tue, Jun 02, 2020 ]

1

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை மியா ஜார்ஜ். தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை என பல படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோருடன் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.


Image    Image


தற்போது சியான் விக்ரம் நடிப்பில் செவேன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும், அஜய் ஞானமுத்து இயக்கி வரும் "கோப்ரா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்திலும் "கண்மணிலா" என்ற படத்தில் நடித்து வருகிறார். 
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக நடித்து வரும் மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் திடீரென இன்று அவரது வீட்டில் மிக சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. இருவீட்டாரின் சொந்தங்கள் மட்டும் பங்கேற்ற இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

Latest News