பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான த்ரிஷா கதாபாத்திரம் குறித்தான அப்டேட்!!

V4U MEDIA [ Mon, Jan 27, 2020 ]

26

​கடைசியாக மல்டிஸ்டாரர் "செக்க சிவந்த வானம்" படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக அதே கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கிளாசிக் நாவல் பொன்னியின் செல்வனை திரைப்படமாக பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இயக்குகிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோருடன் தொடங்கிய நிலையில், விக்ரம், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இப்போது படப்பிடிப்பில் இணைவதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன் , இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.


இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் என்ற இந்த நாவலின் ஹீரோ கேரக்டரில் கார்த்தி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த கேரக்டரில் நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக அதாவது குந்தவை கேரக்டரில் யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்போது த்ரிஷா தான் இந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் முதல் முறையாக அவர் கார்த்திக் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த தகவல் விரைவில் உறுதி செய்யப்படும் என தெரிகிறதுLatest News