'பொல்லாதவன்' படத்தின் இந்தி ரீமேக்கான 'கன்ஸ் ஆஃப் பனாரஸ்' பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகவுள்ளது.

V4U MEDIA [ Tue, Jan 14, 2020 ]

'பொல்லாதவன்' படத்தின் இந்தி ரீமேக்கான 'கன்ஸ் ஆஃப் பனாரஸ்' பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகவுள்ளது.


வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி இணைந்த முதல் படம் 'பொல்லாதவன்'. 2007-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் திவ்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், பானுப்ரியா, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படம் கன்னடம், தெலுங்கு, சிங்களம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது.

'பொல்லாதவன்' கதைக்களத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, 'கன்ஸ் ஆஃப் பனாரஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. சேகர் சூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கர்ணன் நாத், நாதலியா, அபிமன்யு சிங், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 28-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.





Latest News