நடிகர் சூர்யாவை பாராட்டுகிறேன் - வைரமுத்து

V4U MEDIA [ Thu, Aug 13, 2020 ]

115

பிரபல நடிகர் மற்றும் நடிகைகளையும் தனது டுவிட்டரில் வாய்க்கு வந்ததை கூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் மீரா மிதுன். சமீப காலமாக ஒரு படிக்கு மேலே சென்று தளபதி விஜய் யின் மனைவி, மகன் மற்றும் சூர்யாவின் மனைவியை தேவையின்றி இழிவாக பேசியுள்ளார். முன்னணி பத்திரிகைகளே மீராவை சைக்கோ, லூசு என கூறுகின்றனர். இது மட்டுமின்றி ஏற்கனவே பலர் பணத்தை திருடி ஏமாற்றி ஜெயில் போய் வந்துள்ளாள். 


கடந்த சில நாட்களாகவே நடிகை மீராமிதுன் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக தனது டுவிட்டரில் திரை உலக பிரபலங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார் என்பதும், அவர் நினைத்தது போலவே நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தாலும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கோபத்திற்கு பெரிதும் ஆளாகியுள்ளார்.

Tamil Movie News | Tamil Cinema News | Kollywood Movie News ...

நேற்று இயக்குனர் இமயம் பாரதிராஜா இது குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மீரா மிதுனுக்கு கண்டனமும் தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீரா மிதுன் விஷயத்தில் நடிகர் சூர்யா சரியாக நடந்து கொண்டார் என பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்

" சுமத்தப்பட்ட பழியின்மீது

சூர்யாவின் அணுகுமுறை நன்று.

பக்குவப்பட்டவர்கள்

பதற்றமுறுவதில்லை;

பாராட்டுகிறேன்.

நதியோடு போகும் நுரையோடு

கரை கைகலப்பதில்லை "

Tags : Suriya

Latest News