சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது! ,பிரதமர் மோடி , முதல்வர் , ஸ்டாலின் ,கமல் வாழ்த்து !

V4U MEDIA [ Thu, Apr 01, 2021 ]

98

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது! ,பிரதமர் மோடி , ஸ்டாலின் ,கமல் வாழ்த்து !

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினரைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது சூப்பர்ஸ்டார்
 ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” என கமல் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி ,
அதில், தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் ,

இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு -க்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!

முதல்வர் பதிவில் ,
நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.அதில், நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன். தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Cinema