இணையத்தில் வைரலாகும் இந்தியன் 2 படத்தின் புகைப்படம்!!

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் நடிகர் சித்தார்த், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகை ரகுல் ப்ரீத் சிங், நடிகர் பாபி சிம்ஹா என்று பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 
 
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 14வது படமாக உருவாகி வரும் இப்பிரம்மாண்ட படத்தை தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடினர் இதற்காக கமலின் புகைப்படம் ஒன்றை தன் டிவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். 
 
நடிகர் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் கோட்டையில் நின்றபடி வேடிக்கை பார்க்கும்  புகைப்படத்தோடு ஷங்கர் தன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Latest News