வைரலாகும் ஜி.வி.பிரகாஷின் முதல் ஆங்கில ஆல்பம் பாடல் !

V4U MEDIA [ Sat, Sep 19, 2020 ]

154

'அசுரன்', 'சூரரைப் போற்று' என தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்ததாக ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், ஜெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

'கோட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் நேற்று வெளியானது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபல நடிகர் தனுஷ் இணைந்து வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.

Tags : Cinema

Latest News