விஜய் சேதுபதிக்கு பரிசளித்த பார்த்திபன்!!

V4U MEDIA [ Tue, Jan 14, 2020 ]

110

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

 அதில் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தையின்மை அக்குபஞ்சர் ஆகிய பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது.

மேலும், அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு , இன்றைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் செய்யப்பட்டு மற்ற நடிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.


விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக சாலிகிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினர்.இந்த முகாமில் ரத்த தானமும் சில நோய்களுக்கான பரிசோதனைகளும் நடந்தது. மேலும் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல கோவையில் உள்ள ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

மேலும் நடிகர்/ இயக்குனர் பார்த்திபன் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சில பரிசுகளை கொடுத்து, தன்னுடைய அன்பை பரிமாறியுள்ளார்.