தல அஜித் நடித்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ்!!

V4U MEDIA [ Sat, Jan 25, 2020 ]

32

நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் நடித்தார், தர்பாரில் அவர் சூப்பர்ஸ்டாரின் மகளாகக் காணப்பட்டார் மற்றும் அவரது கதாபாத்திரமும், சூப்பர்ஸ்டார் உடனான காட்சிகளு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து, நிவேதா தாமஸின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக் பாபனாசத்தில் கமல்ஹாசனின் மகளாக நிவேதா தாமஸ் முன்பு நடித்திருந்தார். இப்போது நிவேதா தாமஸ் ஒரு சூப்பர்ஹிட் ரீமேக்கில் மற்றொரு சிறந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்கிறார். பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நிவேதா தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

\

இந்தி மொழியில் டாப்ஸி மற்றும் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நிவேதா, அமிதாப் மற்றும் அஜித் நடித்த வக்கீல் பாத்திரத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பார். இந்த ரீமேக்கில் அஞ்சலி மற்றும் அனன்யா நாகல்லா மற்ற இரண்டு பெண் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Latest News