ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" ட்ரைலர் !

V4U MEDIA [ Sun, Oct 25, 2020 ]

130

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. பிகில் உலகமெங்கும் 300கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ​
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  இப்படத்தை பெரும் பொருட்செலவில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.

 

இந்த நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தின் ட்ரைலரை தெலுங்குவில் வெளியிட்டுள்ளார். ட்ரைலர் வெளிவந்த சில நொடிகளிலே ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று அடித்தே கூறலாம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Tags : Nayanthara

Latest News