ஒரே படத்தில் இணையும் நயன்தாரா மற்றும் சோனம் கப்பூர்!!

V4U MEDIA [ Sat, Nov 16, 2019 ]

1

கொரியன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிகை நயன்தாராவும், இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரும் நடிக்கிறார்கள்.

2011-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற கொரியன் திரைப்படம் தான் ‘ப்ளைண்ட்’. இப்படத்தில் இரண்டு வெவ்வேறு போலீஸ் வழக்குகளில் பாதிக்கப்பட்டுள்ளவர் ஒரே ஆளாக இருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் இந்த இரண்டு வழக்குகளுக்கும் எதும் சாட்சி உள்ளதா என்று தேடுகின்றனர். பின்னர் தேசிய காவல்துறை பல்கலைக் கழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவியான சூ-ஹா என்பவர் வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் ஒரு விபத்தின் காரணமாக தன் கண்பார்வையை இழந்துள்ளார் சூஹா.

ஒரு கார் விபத்து குறித்த மிக முக்கியமான ஆதாரம் ஒன்றை அவர் தருகிறார். சூ ஹா-வின் மற்ற புலன்கள் அவருக்கு உதவகியாக உள்ளன. திடீரென இன்னொரு சாட்சியாக, கி-சியாப் என்பவர் காவல் நிலையத்துக்கு வருகிறார். இவர் அந்த சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.

இவர் சொல்லும் சாட்சிகளும் , சூ ஹா சொல்கிற சாட்சிகளும் முற்றிலும் வேறு விதமான சாட்சியாக உள்ளது. இதனால் வழக்கு விசாரணை வேறு திசையில் செல்கிறது. ஒரு வழக்கு, இரண்டு நபரின் சாட்சிகள், இரண்டு வெவ்வெறு விதமான வாக்கு மூலம். கடைசியில் உண்மை எவ்வாறு வெளி வந்தது என்பதுதான் இப்படத்தின் திரைக்ககதை.

க்ரைம் த்ரில்லரான இப்படம், தமிழ் மற்றும் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. தமிழில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க, நடிகை நயன்தாரா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘நெற்றிக்கண்’ என்றுத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை, ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். கடந்த செப்டம்பர் 16-ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

இந்த நிலையில், இந்தியிலும் இப்படம் ரீமேக் ஆகவுள்ளது. முக்கிய பாத்திரத்தில் நடிகை சோனம் கபூர் நடிக்கிறார். இயக்குனர் ஷோமி மகிஜா இப்படத்தை இயக்குகிறார்.