முப்பெரும் விழாவாக 'நான் சிரித்தால்' .

V4U MEDIA [ Tue, Dec 10, 2019 ]

27

முப்பெரும் விழாவாக 'நான் சிரித்தால்' .


அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் 'நான் சிரித்தால்' படத்தில் 'ஹிப் ஹாப்' ஆதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் 'பிரேக் அப் பிரேக் அப் எனக்கு பிரேக் அப் வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள' என்ற பாடல் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வெளியிட்டார்கள். இப்பாடலை ஆதி எழுதி இசையமைத்திருக்கிறார். அவரைப் போலவே சுயமான பாடகர்களை அழைத்து பாட வைத்தார்கள். இதுதவிர, ஆதியின் வாழ்க்கையையும் அவர் கடந்த வந்த பாதையையும் கொண்ட காணொளியையும் வெளியிட்டார்கள். 

மேலும், சிறந்த சிரிப்புக்கான போட்டியை நடத்தினார்கள். இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களது சிரிப்பை மொபைலில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார்கள். அதில் 10 பேரின் சிரிப்பைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கிகினார்கள். 

இப்படத்தின் மீதமுள்ள இரண்டு பாடல்களில் ஒன்றை கோயம்புத்தூரிலும், இன்னொரு பாடலை மதுரையிலும் வெளியிடுகிறார்கள்.

இந்த பயணத்திற்கு 'நான் சிரித்தால்' மியூசிக் டூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எழுத்து-இயக்கம் : இராணா.


Latest News