"பிசாசு 2" படத்தின் இசை பணிகளை துவங்கிய இயக்குனர் மிஷ்கின் !

V4U MEDIA [ Fri, Oct 16, 2020 ]

59

பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை செப்டம்பர் 20 அதிகாலை 12 மணிக்கு வெளியிட்டார்.

மிஷ்கினின் அடுத்த படம் 'பிசாசு 2' என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகிறார். இந்த படத்திற்கு அவர் இசையமைப்பாளர் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மிஷ்கின் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் இசை பணிகள் துவங்கி தற்பபோது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில், கார்த்திக் ராஜா உடன் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பிசாசு படத்தின் மியூசிக் கம்போசிஷன் துவங்கி விட்டது. இந்த பாடல்களை விரைவில் ரசிகர்கள் கேட்டு மகிழலாம்" என கூறியுள்ளார்.

Tags : Cinema

Latest News