கொமாரம் பீமின் குரலாக கர்ஜிக்கும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் !

V4U MEDIA [ Thu, Oct 22, 2020 ]

121

கொமாரம் பீமின் குரலாக, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் திரையில் கர்ஜிக்கிறார்.

"அவன் எதிரே நின்னா கடல் புயலே அடங்கும்.. பேரச் சொன்னா சிகரத்துக்கே தொடை நடுங்கும்..

அவன் இதயத்துடிப்பு கொடியோட படபடப்பு.. அவனோட திமிரு இருட்ட வேட்டையாடுற கதிர்

பூமியோட தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தவன் புரட்சியாய் எழுந்தவன்..
என் தம்பி காட்டுக் கரும்புலி- கொமரம் பீம்......"

இப்படி பீமாக கர்ஜிக்கும், ராம் சரணுக்கு அறிமுகம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. நாடறிந்த ஸ்டார் ஹீரோ அல்லவா அவர்.

தென் இந்தியாவின் பிரபல நடிகரான அவர், RRR படத்தில்அல்லூரி சீதாராம ராஜூவாக ஜொலிப்பார். இப்படத்தில் ஜூனியர் என்டிஆரும் இருக்கிறார்.


Image

சீதாராம ராஜூ, தெலுங்கு தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். கொமரம் பீம், தெலுங்கானாவின் வீரர். இவர் நிசாம் மன்னர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர். இந்த இரண்டு வீரர்களின் வாழ்க்கை தான் இப்படத்தின் உயிர்நாடி. ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜூவாகவும், என்டிஆர் கொமரம் பீமாவாகும் ரசிகர்களை குதூகலிக்க வருகின்றனர். ராம் சரணின் பிறந்தநாளையொட்டி கடந்த மார்ச் மாதம் அல்லூரி சீதாராம ராஜூவின் டீஸர் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிட்டியது.

இதோ இப்போது, RRR குழுவினர், என்டிஆரின் கொமரம் பீம் டீஸரை வெளியிட்டுள்ளனர். ராம் சரணின் குரலில் அறிமுக உரை வெளியாகிறது. இத்திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுவதால் ராம் சரண் குரலிலேயே அனைத்து மொழிகளிலும் அறிமுக உரை வெளியாகிறது.
Image

ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன், பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸ் இன்னும் பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். படத்தை டிவிவி தனய்யாவின் இவிவி என்டெர்டெய்ன்மென்ட் எல்எல்பி நிறுவனம் தயாரிக்கிறது. கீரவாணி இசையமைத்துள்ளார்.

Tags : Cinema

Latest News