மம்மூட்டி படத்திற்காக தனது திருமணத்தை நிறுத்திய ரசிகர்!!

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, கனிகா, உன்னி முகுந்தன், அனு சித்தாரா, சித்திக் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் பத்மநாபன் இயக்கியுள்ள மலையாளப் படம் தான் 'மாமாங்கம்'. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 

வருகிற நவம்பர் 21 அன்று வெளியாகவுள்ள மம்மூட்டி நடித்துள்ள இப்படத்திற்காக தன் திருமணத்தைத் தேதியை மாற்றியுள்ளார் கொச்சியைச் சேர்ந்த நடிகர் மம்மூட்டியின் உயிர் ரசிகரான மேமோன்.

நவம்பர் 21 அன்று வட பரவூரில் மேமோனுக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் மம்மூட்டியின் தீவி ரசிகரான மேமோன், தனது தலைவரின் மாமாங்கம் படமும் அதே நவம்பர் 21 அன்று வெளியாவதை அறிந்த பின் தன் திருமணத் தேதியை மாற்றி வைக்க முடிவு எடுத்தார். தனது திருமணத்தால் மம்மூட்டியை மாமாங்கம் படத்தின் fdfs எனப்படும் முதல் காட்சியில் பார்ப்பது தடைபடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்தார். 

இதையடுத்து மேமோனின் திருமணம் முன்னதாகவே கடந்த அக்டோபர் 30 அன்று நடந்து முடிந்தது. இதன்மூலம் மேமோன் நவம்பர் 21 அன்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு மம்மூட்டி படத்தின் fdfs காட்சியைப் பார்க்கவுள்ளார். 


Latest News