அனிருத் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த தளபதி விஜய் யின் "மாஸ்டர்" டீம் !

V4U MEDIA [ Sat, Oct 17, 2020 ]

78

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் ,சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய "குட்டி ஸ்டோரி" பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.

இன்று (அக்டோபர் 16) இசையமைப்பாளர் அனிருத் தனது பிறந்தநாளை கொன்டுகிறார். ரசிகர்கள் #HBDRockstarAnirudh , #HBDAnirudh என்ற ஹேஷ் டேக்கில் உலகளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். மாஸ்டர் டீம் இசையமைப்பாளர் அனிருத் க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற "Quit Pannuda" பாடலின் லிரிகால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் .அந்த வீடியோ பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Cinema

Latest News