"தளபதி விஜய்"யை சந்திக்கவிருக்கும் இயக்குனர் லோகேஷ் !

V4U MEDIA [ Sat, Aug 08, 2020 ]

149

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
Malavika Mohanan's Character In Vijay's Master Is Revealed ...
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய "குட்டி ஸ்டோரி" பட்டி தொட்டி வரை பெரிய ரீச். மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளான போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஃபைனல் எடிட்டை தளபதி விஜய்யிடம் காண்பிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை நேரில் சந்திக்க உள்ளாராம். தளபதி விஜய் பார்த்து படத்தை ஓகே சொல்லிவிட்டால் லோகேஷ் அடுத்த புரொஜெக்டில் கதை திரைக்கதை கான வேலையை ஆரம்பித்துவிடுவார். கொரோனா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் மாஸ்டர் திரையரங்ககுளில் ரிலீசாகும்.

Tags : Cinema

Latest News